செவ்வாய், 22 டிசம்பர், 2009

Mental block

ஒரு செயலுக்கான அடிப்படைமுயற்சியைக்கூட எடுக்காமல்," என்னால் இது
முடியாது..." என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளும் பழக்கம். இதற்கு இன்னொரு பெயர் mental bloc. அதாவது முயற்சியே செய்யாமல் ஒரு செயலை தன்னால் செய்யமுடியாதுன்னு அடிமனதில் ஒரு எண்ணம் தோன்றும்.அதனால்
மத்தவர்கள் முயற்சி செய்ன்னு சொன்னாலும் நம்மால் செய்யமுடியாது.
உதாரணமாக சொன்னால் சிலர் நாலாவது வகுப்பு கணக்கை கொடுத்தால் கூட,
"ஐயோ என்னால் முடியாது. நான் கணக்குல வீக்னு சொல்லி அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள். சில பேர்களுக்கு குறிப்பாக பெண்களுக்குஉடல் பயிற்சி
பற்றிய mental bloc நிறைய உண்டு. காலையில் யோகா செய்தா உடம்புக்கும் மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கும்னு சொன்னாலும் சரி. அல்லது கட்டிக்கொள்கிற காட்டன் புடவையை அயர்ன் பண்ணிதான் கட்ட கூடாதான்னு
சொன்னாலும் சரி, உடனே இந்த வயசுல இதுதான் எனக்கு குறைச்சல்னு அலுத்து கொள்ளும் பெண்கள் பலர் உண்டு. அவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்
பார்த்த பல விஷயங்கள் நடந்திருக்காது.ஏதோ குழந்தைகளுக்காக வாழ்கிறேன்.
அவர்களை நல்லமுறையில் வளர்க்கரதுதான் முக்கியம் என்று தானே மனதுக்கு ஒரு கடிவாளம் போட்டுக்கொண்டு வாழ்துகொண்டிருப்பார்கள்.
அது தவறு .எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கவேண்டும். நாம் நமக்காக
வாழவேண்டும் என்று அந்த mental block இலிருந்து வெளியே வரவேண்டும்.

புதன், 2 டிசம்பர், 2009

எஸ் .எம் .எஸ்.

நான் படித்து ரசித்த சில எஸ்.எம்.எஸ்கள் .
சாப்ட் வேர் என்ஜினியர்ஸ் படம் தயாரிச்சா என்ன மாதிரி டைட்டில் இருக்கும்?
G mail S/O email.
Ram தேடிய motherboard.
7 gb rainbow. colony.
எனக்கு 20mb உனக்கு 18 mb.
Programme ஆயிரம்.
ஒரு Mouse.. இன் கதை.
மானிட்டருக்குள் மழை.
எல்லாம் Proceesser செயல்.
நான் Graphic டிசைனர்.
C மனசுல C++.

நான் Complan boy.
நான் Complan girl.
அப்பா--- என்ன கொடும சார் இது? நான் பெத்த பிள்ளைகள் எவன் பெயரையோ
சொல்லிக்கிட்டு திரியுதுங்க.

College சம்மந்தப்பட்ட வடிவேல் டயலாக்ஸ் .
Class test....சொல்லவே இல்ல.
Teaching....முடியல.
Exam..... உட்கார்ந்து யோசிப்பாங்களோ.
Arrears.....ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி.
Bit......எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.
Result.... இப்பவே கண்ணை கட்டுதே.
Degree.... வரும்..............ஆனா வராது.

இதைபோல நிறைய S.M.S கைவசம் இருக்கு. தொடரும்.....

செவ்வாய், 1 டிசம்பர், 2009

இளமைப்பருவம் தொடர்கிறது....

அதிகமான பிடிவாதம் , சகிப்புத்தன்மை இல்லாதது, எல்லா விஷயங்களையுமே தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல்... இவையெல்லாம் இப்பருவத்தின் ஸ்பெஷல் குணங்கள். இவர்களிடம்
நெகடிவாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் ,'நீ உருப்படவே போறதில்ல,.......பக்கத்துவீட்டு பையனை பாரு.அவன் எப்படி படிக்கிறான்
போன்ற வார்த்தைகளை பேசவே கூடாது. அவர்கள் சொல்லுகின்ற சின்ன
பொய்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கக்கூடாது. அது அவர்களை
மனதளவில் பாதித்து வீட்டை விட்டே ஓடிபோகலாமா என்ற நிலைமைக்கு
தள்ளிவிடும். இவர்கள் எப்போதும்துறுதுறுப்பாக இருப்பார்கள்.
இவர்களுக்கு நேரெதிராக சிலர் எதிலும் ஒட்டாமலும் ,யாரோடும் பேசாமலும் தனிமையை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
ஒன்று...'பகல் கனவு காண்பது'.
இரண்டு....அவர்களின் மனது எதாவது ஒரு விஷயத்தினால் மிக மோசமாக
பாதிக்கப்பட்டிருக்கும். உதாரணம்... அம்மா-அப்பா சண்டை, காதல் தோல்வி.
இந்த மாதிரி குழந்தைகளை அன்பாக கவனித்துக்கொண்டாலே போரும்.
இந்த இளம்பருவ குழந்தைகளை நண்பர்களாக பாவித்தால் பிரச்சனையே
வராது. அவர்களுடைய விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். பருவ
கால குழப்பங்களை கண்டுகொண்டு பக்குவமாக அவர்களுக்கு உதவ
வேண்டும்.
கடைசியாக ஒரு வார்த்தை..... 'நான் வளர்கிறேனே மம்மி' என்று
சொல்லாமல் சொல்கின்ற பருவம் இது. ஜாக்கிரதையாக ஹாண்டில் பண்ண
வேண்டிய பருவமும் கூட.
இளமைப்பருவம்

குழந்தைப்பருவத்திலிருந்து மெள்ள மெள்ள அழகான பதின்மூன்று
வயது பருவத்துக்கு மன மற்றும் உடல் ரீதியாக மாறுவதுதான் டீனேஜ் எனப்படும் இளமைப்பருவம். இந்த மாறுதல் ஆரோக்கியமாக அமைந்தால்தான்
குழந்தைகளின் முழு வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். இந்த வயதில்
கொஞ்சம் சறுக்கினாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றவர்களும்தான். எனவே இப்பருவத்தை இரு தரப்பும் பதற்றமில்லாமல்
கடக்கவேண்டும்.
இந்த வயதில் படிப்பால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களுக்கு அதிகமாக
இருக்கும்.இரண்டு வகையான மனப்பான்மையோடு இருப்பார்கள். 'எதிலும்
தான் மட்டுமே முதலாக இருக்கவேண்டும்.எல்லாரும் தங்களை பாராட்டவேண்டும் என்று நினைப்பார்கள். உயர்வான எண்ணங்களோடு
இருப்பார்கள். இன்னொன்று ,அதற்கு எதிரான 'என்னை விட்ட போதும் ' என்கிற
தாழ்வு மனப்பான்மையோடு இருக்கின்ற மனப்பான்மை. இந்த மாதிரி குழந்தைகளை இதைப் படி....ம்யுசிக் கிளாஸ் போ... ஆல் இந்தியா மெடிக்கல்
நுழைவு தேர்வு எழுத்து'.... இப்படியெல்லாம் கட்டயப்படுதினால் மன அழுத்தம்
ஏற்படும். அவர்களின் திறமையை கண்டறிந்து அதில் அவர்களை இடுபடுத்தினால் அவர்கள் மனஅழுத்தம் குறையும்.

இந்த வயது பிரச்சனைகளை விரிவாக அடுத்த இடுகையில் பார்க்கலாம்.
நன்றி.மீண்டும் வருக.

வெள்ளி, 27 நவம்பர், 2009

வாழ்வியல் - மரணம்.

மரணம் மிகவும் பலசாலியில்லை. மிகவும் சக்தி வாய்ந்ததும் இல்லை.
மரணம் ஒரு இயற்கையான முடிவு.இந்த முடிவை எல்லோரும் ஏற்கவேண்டும்.
அதற்காக மரணத்தை நாமே வலியவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற
அவசியமில்லை.வாழ்க்கை என்பது மிகவும் புனிதமானது என்று உணருங்கள்.அதை மதியுங்கள்.இந்த செய்தியை சொல்பவர் ஜான் டான் என்ற
பிரபல கவி. அவர் மரணனத்தை கோபிதுக்கொள்கிறார். 'மரணமே! நீ மிகவும் ஆற்றலுடைய பலசாலி என்று கர்வம் கொள்ளவேண்டாம் ' என்று கடிந்து கொள்கிறார். நமக்கு சிறு புத்திமதியும் சொல்கிறார்.
வாழ்க்கையை சந்தோஷத்துடன் அனுபவிக்கவேண்டும். வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யவேண்டும், அனுபவிக்கவேண்டும் என்று முடிவெடுத்தீர்களோ அதையெல்லாம் செய்ய முயற்சி செய்யுங்கள்.ஏனென்றால்
மரணத்துடன் போராடுவதற்கு மருந்து அவசியமில்லை, வாழ வேண்டும் என்ற
உறுதிதான் அவசியம்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இது என்னுடைய முதல் பதிவு.

நாம் விரும்புகிற விஷயங்களே நம்மை சுற்றி நடக்கவேண்டும் என்று எதிபார்ப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது. நடப்பதை அப்படியே இயல்பாக
ஏற்றுக்கொண்டுவிட்டால் பொறுமையினை இழக்கவேண்டிய அவசியமே இருக்காது. அடிக்கடி கோபப்படுகிறோம் ,வெறுப்படைகிறோம். இது தேவைதானா
என்று கொஞ்ச நேரம் யோசித்துப்பார்த்தால், எவ்வளவு அற்பமான விஷயங்களுக்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம் என்பது புரியும்.
பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகிவிடும்.
மற்றவர்களின் செயல்களை பார்த்து பொறுமை இழக்ககூடாது.பொருத்து போனால் அவர்கள் தானாகவே உங்களை புரிந்துகொள்வார்கள். பொறுமையில் எருமையாக இருக்கவேண்டும்.பொறுத்தார் பூமி ஆள்வார் என்று ஒரு வசனம் உண்டு.அதை பின்பற்றினால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.