வெள்ளி, 27 நவம்பர், 2009

வாழ்வியல் - மரணம்.

மரணம் மிகவும் பலசாலியில்லை. மிகவும் சக்தி வாய்ந்ததும் இல்லை.
மரணம் ஒரு இயற்கையான முடிவு.இந்த முடிவை எல்லோரும் ஏற்கவேண்டும்.
அதற்காக மரணத்தை நாமே வலியவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற
அவசியமில்லை.வாழ்க்கை என்பது மிகவும் புனிதமானது என்று உணருங்கள்.அதை மதியுங்கள்.இந்த செய்தியை சொல்பவர் ஜான் டான் என்ற
பிரபல கவி. அவர் மரணனத்தை கோபிதுக்கொள்கிறார். 'மரணமே! நீ மிகவும் ஆற்றலுடைய பலசாலி என்று கர்வம் கொள்ளவேண்டாம் ' என்று கடிந்து கொள்கிறார். நமக்கு சிறு புத்திமதியும் சொல்கிறார்.
வாழ்க்கையை சந்தோஷத்துடன் அனுபவிக்கவேண்டும். வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யவேண்டும், அனுபவிக்கவேண்டும் என்று முடிவெடுத்தீர்களோ அதையெல்லாம் செய்ய முயற்சி செய்யுங்கள்.ஏனென்றால்
மரணத்துடன் போராடுவதற்கு மருந்து அவசியமில்லை, வாழ வேண்டும் என்ற
உறுதிதான் அவசியம்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இது என்னுடைய முதல் பதிவு.

நாம் விரும்புகிற விஷயங்களே நம்மை சுற்றி நடக்கவேண்டும் என்று எதிபார்ப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது. நடப்பதை அப்படியே இயல்பாக
ஏற்றுக்கொண்டுவிட்டால் பொறுமையினை இழக்கவேண்டிய அவசியமே இருக்காது. அடிக்கடி கோபப்படுகிறோம் ,வெறுப்படைகிறோம். இது தேவைதானா
என்று கொஞ்ச நேரம் யோசித்துப்பார்த்தால், எவ்வளவு அற்பமான விஷயங்களுக்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம் என்பது புரியும்.
பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகிவிடும்.
மற்றவர்களின் செயல்களை பார்த்து பொறுமை இழக்ககூடாது.பொருத்து போனால் அவர்கள் தானாகவே உங்களை புரிந்துகொள்வார்கள். பொறுமையில் எருமையாக இருக்கவேண்டும்.பொறுத்தார் பூமி ஆள்வார் என்று ஒரு வசனம் உண்டு.அதை பின்பற்றினால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.