வெள்ளி, 19 அக்டோபர், 2012

Manam ennum oonjal.

                     மனம் என்னும் ஊஞ்சல் 

நான்  சமீபத்தில்  சக்தி  விகடனில்  ஒரு கட்டுரை  படித்தேன் .வெற்றிக்கு  வழி
காட்டும்  விந்தை மனம்  என்ற  தலைப்பில்  திரு விஜயலட்சுமி  பந்தையன் 
ஒவ்வொரு  மாதமும்  ஒரு  கட்டுரை  எழுதி  வருகிறார். நான்  தவறாது   அதை
படிப்பேன்.எனக்கு  மிகவும்  பிடித்த  தொடர். இந்த  மாதம்  ஊஞ்சல்  மனம்  என்ற  தலைப்பில்  அவர்  எழுதி  இருந்தது  எனக்கு  ரொம்பவே  பிடித்தது.
அதை  நண்பர்களிடம்  பகிர்ந்துகொள்ளவே  இந்த  பதிவை  எழுதுகிறேன்.

ஊஞ்சலுக்கும்  நம்  மனதுக்கும்   ஒரு  சம்மந்தம்  இருக்கிறது.  அது  எப்படி?
ஒரு  கதை .....
ஒரு  ஊரில்  பணக்காரர்  ஒருவர்  இருந்தார். நிறைய  பணமிருந்தும்  மனதில் 
நிம்மதி  இல்லை. நிம்மதி  கிடைக்க  எவ்வளவோ  முயற்சி  செய்தும்  அது 
கிடைக்கவில்லை. அந்த  சமயத்தில்  அந்த  ஊருக்கு  ஞாநி  ஒருவர்  வந்தார்.
எல்லாருடைய  பிரச்சனைகளுக்கும்  அவர்  ஆலோசனை  சொன்னார் .இந்த 
விஷயத்தை  கேள்விப்பட்ட  பணக்காரரும்  ஞாநியை  சந்திக்க  போனார். தன் 
மனசு  சந்தோஷமாக  இல்லை .சந்தோஷமோ  அல்ல  துக்கமோ  எதுவுமே  என் விஷயத்தில்  நிலையாக  இருப்பதில்லை.கவலைப்படும்  சமயத்தில்  மனம்  மகிழ்ச்சியில்  திளைக்கிறது. அதே  போல சந்தோஷமாக  இருக்கும்போது  மனம்  வருத்தத்தில்  ஆழ்ந்துவிடுகிறது.இது  ஏன்  என்று 
எனக்கு  புரியவி ல்லை  என்று   சொன்னார். இதை  கேட்ட  ஞாநி   பதில் 
எதுவும்  சொல்லாமல்  ஒரு  பூனையை  பிடித்து  பணக்காரரிடம்   கொடுத்தார்.
பின்  பணக்காரரிடம்  இந்த  பூனை  உன்  வீட்டில்  ஒரு மாதம்  இருக்கட்டும்.
தினமும்  இது  என்னென்ன  செய்கிறது  என்பதை  மட்டும்  பார்த்துகொள்.
அதற்கு அப்புறமும்  உனக்கு  பிரச்சனை  இருந்தால்  இங்கு  வா  என்று 
சொல்லி  அனுப்பி வைத்தார்.

பணக்காரரும்  அவர்  சொன்னபடியே  பூனை  தினமும்  என்ன  செயகிறதுன்னு 
பார்க்க  ஆரம்பித்தார்.  முதல்நாள்  பூனை  வீட்டை  சுத்தி சுத்தி  வந்தது.சில 
 நாட்களுக்கு பிறகு  பங்கலவிளிருன்ற்ஹா  எலிகளை  வேட்டையாட  ஆரம்பித்தது . பணக்காரருக்கு  பூனையின்  செயல்  சந்தோஷத்தை  தந்தது.
அடுத்தவாரம்  பூனை  பணக்காரர்  ஆசையாக  வளர்த்துக் கொண்டிருந்த  கிளியின்  மீது  பாய்ந்து  குதறியது. பூனையின் செயல்  அவருக்கு  கோவத்தையும்   ஆத்திரத்தையும் வரவழைத்தது..பூனையை  விரட்டிடலாமானு  நினைத்தார்.ஆனால்  ஒரு  மாதத்திற்கு  கொஞ்ச  நாளே 
இருப்பதால்  கோபத்தை  அடக்கி  கொண்டார். அடுத்து வந்த  நாட்களில்  பூனை  வெளியிடங்களுக்கு  போய்வர  ஆரம்பித்தது.எதை எதையோ  கடித்து 
குதறியது.பணக்காரருக்கு  அதன்   எந்த  செயலும்  சந்தோஷத்தையோ  துக்கத்தையோ  தரவில்லை.

நாளையோடு ஒரு  மாதம்  முடிய  போகிறது.பணக்காரர்  பூனையின்  செயல்களை  மனதில்  அசை  போட்டு  பார்த்தார். முதலில்  பூனை  எலிகளை 
பிடித்தபோது  சந்தோஷமாக  இருந்தது.ஏனென்றால்  எலிகள்  தன்  சொந்தம்  
இல்லை.மேலும்  தனக்கு  தொந்தரவு  கொடுத்துவந்தது.  அவை  தொலைந்ததால்  நிம்மதி  ஏற்பட்டது.  அப்புறம்  சில  நாட்கள்  கழித்து
 தான்  ஆசையாக  வளர்த்த  கிளியை  கொன்றபோது   பூனையின்  மேல் 
கோவம்  வந்தது.  அதன்  காரணம்  கிளி  தம்முடையது  என்ற  எண்ணம்தான். 
கடைசியில்  பூனை   எதையெல்லாமோ  கடித்து  குதறியபோது  தம்மிடம்  எந்த  பாதிப்பும்  இல்லை. ஏனென்றால்  பூனையின்  செயலால்  எந்த  நஷ்டமோ  லாபமோ  இல்லை. இதையெல்லாம்  யோசித்து  பார்த்த  பணக்காரருக்கு   தன்  பிரச்சனை  மெல்ல  விலகுவது  தெரிந்தது.
முன்னே  செல்லும்  ஊஞ்சல்  அடுத்த  நொடியே  பின்னே  வந்துடும் . அது 
நிலையாக  நிற்காது  அது போலதான்  நம்  மனசும். தன்னம்பிக்கையோடு  ஒரு  சமயம்  முன்னாள்  போகும். மறு  சமயம்  எதோ  காரணத்தால்  பின்னாடி 
போகும். இதுதான்  ஊஞ்சல்  மனம்னு  Dr. விஜயலட்சுமி  பந்தையன்  விளக்கியுள்ளார்.

அடுத்த  மாதம்  அந்த  ஊஞ்சல்  மனத்தை  கட்டுப்படுத்துவது  எப்படின்னு  விளக்க போறார்.ஆவலோடு  காத்திருப்போம்.



 




 

 








   
 
 
 

1 கருத்து: